
யாழ். சித்தன்கேணி வட்டு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கௌரி மகேந்திரராசா அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இரத்தினவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதபிள்ளை திலகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கஜனி, பிரதீபா(கனடா), யுவராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயசங்கர், சேரன்(கனடா), ஹரிநிவேதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசக்தி, காலஞ்சென்றவர்களான திருநாதன், சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனுஷ்ரிகன், வதுர்சிகா, பிரியங்கன், பிரவீன், லஷந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt sympathies to Mr. Mahenthirarasa & family