திதி:16/09/2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கௌரி அல்லமதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கௌரி! பாசமாய்ப் பார்த்த முகம் எங்கே
பாசக் கண்களில் காட்டிய கருணை எங்கே
அன்பாய் அழைத்த குரல் எங்கே
ஆறுதல் வார்த்தகள் கூறிய நீ எங்கே
கலகலப்பாய் நாம் வாழ்ந்த நாட்கள் எங்கே
துணிவோடு வழி நடாத்திய தலைவி எங்கே
எங்கு தான் தேடுவோம் எப்போ தான் காண்போம்!
உன் நினைவில் உருகுகின்றோம்.
கௌரி! அகலவில்லை உங்கள் அன்பு முகம்
உண்ணும் போதும், உலாவும் போதும்,
உறங்கும் போதும் உங்கள் நினைவுகள்
எம் இதயத்தை வாட்டி வதைக்கின்றனவே.
எமைக் காண ஓடி வாருங்கள்
உங்கள் முகம் காணத் துடிக்கின்றோம் ...!
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எங்கள் அன்பின் சிகரமே எம் இல்லத்தின் குலவிளக்கே
நீங்காத நினைவுகள் தந்து நீண்ட தூரம் சென்று விட்டீர்களே
ஓராண்டு கடந்தாலும் ஓயவில்லை உங்களின் நினைவுகள் !
கண்ணை இமை காப்பது போல் எமை
அன்பினால் அரவணைத்து, ஆதரவு தந்து,
துன்பம் வருங்கால் எதிர்கொண்டு
இன்பம் பெருக நின்ற பாசத் தெய்வமே!
மனைவியாக, தாயாக, மாமியாக,
குடும்பத் தலைவியாக
நிழல் தந்த எம் அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திஹி
My dearest loving ❤️ gowri I miss you so much 💓 Thevan I know your pain she is always with you ❤️. I love you gowri.