

யாழ். நாகர்கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தப்பிள்ளை(ஆயுர்வேத வைத்தியர் நாகர்கோவில்), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் சாவகச்சேரி, பிரதேச சபை கொடிகாமம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பூங்கோதை, பூங்கல்யா(லண்டன்), குருபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகதாசன்(ஆசிரியர்- மிருசுவில் வடக்கு சு.த.க பாடசாலை), பரமசிறி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், இரத்தினசிங்கம், பரராஜசிங்கம், பத்மநாதன் மற்றும் கமலாதேவி, இந்திரதேவி, குகநாதன்(சுவிஸ்), நவநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற விக்கேஸ்வரி, கமலேஸ்வரி(ஜேர்மனி), இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி(கனடா), சர்வேஸ்வரி, நகுலேஸ்வரி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபியுகன்(யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி), கௌசல்யா(லண்டன்), மாதுளன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று எழுதுமட்டுவாளில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எழுதுமட்டுவாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.