யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் இல. 40 கோவில் வீதி முகத்துவாரம் அந்தியேட்டி மண்டபத்தில் நடைபெற்று, 24-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல 25A பஸல்ஸ் லேன் வெள்ளவத்தையில் வீட்டுக்கிரியை நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடுமப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து வெள்ளவத்தை இல. 07 சங்கம் ஒழுங்கை கொழும்பு- 06 யில் உள்ள கொழும்புத்தமிழ் சங்க மண்டபத்தில் மு.ப 11:00 மணியளவில் பிரார்த்தனையும் அதனைத்தொடந்து இம் மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.