முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபிரமணா சிவஞானசுந்தரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கோபியின் நீங்காத நினைவுகள்
வருடம் கடந்த போதும்
இன்னும் மீளவில்லை சோகத்தில் இருந்து
இதயத்தில் ஆழமாகக் கீறிவிட்டது உன் பிரிவு
எல்லோருக்கும் பிடித்தது போல்
எப்படி ஒருவரால் இருக்க முடியும்?
அது எப்படி உன்னால் மட்டும் முடிந்தது?
வாழும் போதே ஒரு தெய்வம் போல் இருந்தாய்!
வழிகாட்டியாய் இருந்தாய்,
கை கொடுக்கும் கரங்களாய் இருந்தாய்,
தூணாய் இருந்தாய்,
மனைவி மக்கள் குடும்பத்திற்கு துணையாய் இருந்தாய்.
இவ்வளவுமாக இருந்தும்,
ஏன் எங்களை இருட்டில் தள்ளி விட்டாய்?
பிள்ளைகள் உன்னை தேடுகிறார்கள்,
பிஞ்சுக் கைகளால் உனைத் தொட ஒரு முறை
மனைவி மனமுடைந்து கலங்குகிறாள்,
மறுபாதியை மறுபடியும் காண ஒருமுறை
அம்மா வேதனையில் கலங்குகிறார்
ஆசைக் குழந்தையை அரவணைக்க ஒரு முறை
சகோதரர்கள் மதி கலங்கி நிற்கிறார்கள்
சந்தோசமாய் உரையாடிப் பேசுவதற்கு ஒரு முறை
மச்சான் மச்சாள் யாவரும் சோகத்தில் உள்ளனர்
மகிழ்ந்து சிரித்து ஒன்று கூட ஒருமுறை
மைத்துனர்மார் தவிக்கின்றனர்
மனசார ஒன்றாய் இருந்து உண்ணுவதற்கு ஒருமுறை
பெறாமக்கள் மருமக்கள் வருந்துகின்றனர்
பிரியமான உன்னிடம் அன்பைக் கொட்ட ஒருமுறை
நண்பர்கள் நிலை குலைந்து நிற்கின்றனர்
நல்லதோர் சுற்றுலா சேர்ந்து செல்ல ஒருமுறை
உறவினர் உருகுகின்றனர்
உபதேசித்து உனக்கு விருந்தளிக்க ஒருமுறை
இன்னும் ஒருமுறை நமக்கு கிடையாதா
இந்த இனிமையான ”ஒரு முறை”
காலம் கடந்தாலும்!
ஜென்மம் முடிந்தாலும்!
கோபி உன்னை நாம் மறவோம்!
வலியை வார்த்தையால் சொல்ல முடியாது,
வானில் இருந்து நீ உணர்ந்தால் மட்டும் உண்டு.
உன்னை என்றும் நேசிக்கும்
மனைவி, பிள்ளைகள், அம்மா, சகோதரர்கள்,
நண்பர்கள், உற்றார், உறவினர்கள்
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Salivan family & friends (1998 O/L M.C.C).