
கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், பூநகரி முக்கொம்பனை வதிவிடமாகவும் கொண்ட கோபாலதேவன் புவனேஸ்வரி அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அகிலா(ஆசிரியை- முட்கொம்பன் மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற அகிலன், அமலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபேசன்(சுவிஸ்), கலைவாணி(ஜேர்மனி), செந்தூரன்(தொழிநுட்ப உத்தியோகத்தர், விவசாய பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), தனுசிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கனகாம்பிகை, ராசலட்சுமி, ராசபூபதி, காலஞ்சென்ற சந்திரசேகரம், கோவிந்தநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதிரன், அத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐந்தடிவான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details