Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JAN 1968
இறப்பு 15 MAR 2022
அமரர் கோபாலபிள்ளை சிவசேகரம் (சிவம்)
வயது 54
அமரர் கோபாலபிள்ளை சிவசேகரம் 1968 - 2022 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணை மேற்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சிவசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!

என் அன்பிற்கும் ஆசைக்கும் உரியவரே
கடைசிவரை காக்காது சடுதியில் சென்றதேன்!!
கலங்கி நிற்கின்றேன், கதறி அழுகின்றேன்
கனவாகி போகாதோவென்று கடவுளை வேண்டி!!

எங்கு சென்றீர்கள் எனை விட்டு!
எல்லாமே இழந்தது போல் என் மனம் தவிக்கிறதே!
நித்தம் கண்ணீர் வடிகிறது!

கண்மூடித் திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு
நிரந்தரமாக பிரிந்தீர்களே அப்பா
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் அப்பா?
எங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது!

தினந்தோறும்! அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?

நீங்கள் இல்லாத இந்த உலகம் எங்களுக்கு
இனி வெறும் பாழடைந்த மண்டபம்தான்

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 21 Mar, 2022