யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலப்பிள்ளை சச்சிதானந்தன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே
எங்கள் அன்பு அப்பாவே
நொடிப்பொழுதில் எமை நோகவிட்டு
சென்று விட்டீர்கள்!
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
நீர் இவ்வுலகில் நேர்வழி காட்டி
நாம் சென்ற பாதையெல்லாம்
நல்லவராய் வேண்டுமென்று
கண்மணி போல் காத்திருந்த
எம் தந்தையே! எங்கு சென்றாய்?
பாரினில் மதிப்புடனும்
பண்புடனும் வாழ்ந்தீர்!
எங்களையும் வாழ வைத்தீர்!
உம் பண்பும் மதிப்பும் உள்ள
பிள்ளைகளாக நாங்கள் வாழ்ந்திடுவோம்
ஆண்டுகள் பதினைந்துதல்ல
நம் மூச்சுள்ளவரை
உங்களை மறவோம் ஐயா!
உங்கள் ஆத்துமா சாந்தியடைய இறைவனை வேண்டி
உங்கள் பிரிவால் வாடிதுடிக்கும் குடும்பத்தினர்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மகள்கள், மருமகன்கள், பேரன்கள், மற்றும் பேத்திகள்.