

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை பத்மநாதப்பிள்ளை அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
ஜெயநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, ஏகாம்பரம், கமலம், சேனாதிராஜா(தம்பிப்பிள்ளை), பொன்னம்மா, இராசப்பா, இராஜலட்சுமி மற்றும் இந்திராவதி(பாக்கியம், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஷினி, சுதர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
சிவகுமார் (யூ.கே.ஈ), காயத்ரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயபிரிதீவ்(அவுஸ்திரேலியா), அபிஷேக், லக்ஷனா, அஸ்விக்கா, சந்தோஷ், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, இராசம்மா, சுப்பையா, மின்னொளி, கந்தையா, இந்திராணி, சபாரத்தினம், திருநாவுக்கரசு, லீலாவதி, மகேஸ்வரி, இராசநாயகம், தவபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பூபாலசிங்கம், இரத்தின சபாபதி, விமலாதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06.00 மணிவரை பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் (Borella Jayarathne Malshwa) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் இறுதிக் கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
88, வாசல வீதி,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு-13.