கோபாலபிள்ளை கனகரத்தினம்(மகோ கனகரத்தினம்):-
(பிறப்பு:- 29 Apr, 1940 - இறப்பு :- 09 Dec, 2022)
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை கனகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
மகேஸ்வரி கனகரத்தினம்:-
பிறப்பு : 16 Oct, 1939 - இறப்பு : 19 Dec, 2023
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.