Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 04 JUL 1981
இறப்பு 18 JUN 2024
திரு கோபிராஜ் சிவபாலச்சந்திரன்
வயது 42
திரு கோபிராஜ் சிவபாலச்சந்திரன் 1981 - 2024 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கோபிராஜ் சிவபாலச்சந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பெரியவிளான் மண்ணில் சிவபாலசந்திரன்
புனிதவதியின் மூத்த பாச புதல்வராக
81 இல் தடம் பதித்த - நீங்க
(சிவபாலசந்திரன் கோபிராஜ்) பாசமுள்ள பண்பாளராக,
நல்ல நாணயமானவராக, அண்ணராக, மைத்துனராக, மாமனாக, பெரியப்பாவாக,
அன்பான கணவராக, பிள்ளைகளின் காவலராக,
வலம் வந்த உங்களை இறைவன் இடைநடுவில் பறித்து
எம்மையெல்லாம் அனாதை ஆக்கியதேன்
என்ற புதிருக்கு எம்மால் முப்பத்தொரு நாளாகியும்
விடை காணமுடியல்ல!!! - ஏன்???
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்க முகம் எந்நாளும் உயிர் வாழும்;
மண் விட்டு மறைந்து நீங்க விண்நோக்கிச் சென்றாலும்
எம் கண்விட்டு மறையாமல் என்றும் எம்மனதில் இருப்பீர்கள்.
உங்க ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகளும் 31ம் நாள் நினைவஞ்சலியும் 18-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் மேற்கு வீரகொடியன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதியபோசன நிகழ்வும் நடைபெறும்.

மேலும், 20-07-2024 சனிக்கிழமை அன்று அன்னாரது நினைவு பூசை நடைபெற்று பின்னர் Kenton road, HA39QN, UK எனும் முகவரியில் ந.ப 12.00 மணியளவில் மதியபோசன நிகழ்வும் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.