யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானமணி நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு
பறந்து நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல்
நாம்
அழுதாலும் உன் ஆன்மா
ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய
அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கிறோம்!
எமையசைத்து பார்க்கிறது
எம்முறவே
எப்பிறப்பில் உம்மை
நாம் காண்போமே?
நிம்மதி கொண்ட போதும்– எம்
கண்கள் கடல் ஆகின்றன- உன்
காலடியில் எம் அன்பை
நினைவு
மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்..
என் அருமைச் சகோதரியே!
என் இனிய அக்காவே - நீ
எங்கு சென்றாய் எமை விட்டு
எண்ண முடியவில்லை - நீ
எம்முடன் இல்லை என்பதை
ஒரு கூட்டுப் பறவைகளாய் - நாம்
ஒன்றாக வாழ்ந்திருந்தோம்.
அன்பிற்கு உறைவிடமாக இருந்த
எங்கள் அன்பு அத்தையே
ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் -அத்தை
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
அன்பையும் அறிவையும் தந்து
எங்களை வளர்த்த
அன்பு அத்தை
இந்த அவனியிலே எமை தனியே
தவிக்க விட்டு அமைதியாய் சென்றதேனோ?
களங்கமற்றதம்மா உங்கள் பாசம்
நெகிழவைத்தது
உங்கள் அன்பு
உயிரை உறைய வைத்தது உங்கள் பிரிவு!
இந்த மண்ணில் உங்களை போல் யாரை இனி நாம் காண்போம் அத்தை?
எமது அன்பு அத்தையின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...