யாழ். கரணவாய் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசெல்வம் பரமகுரு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்
தாரமாய், தாயாய் உங்கள் கஷ்டங்களை விடுத்து
என்னை நீங்களாக நினைத்து எந்த
குறையும் இல்லாமல் பார்த்த என் தாயே!
நாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தினம் தினம் வாடுகின்றேன் என் வாழ்வினிலே!
அன்புள்ள அம்மா!
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா.
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!! ஆனால்
இமைப் பொழுதில் காலன் உம்மைக் கவர்ந்துவிட்டான்
நீங்கள் எங்களை விட்டுச் சென்று
இன்றோடு ஐந்தாண்டுகள் ஆகின்றன!
ஆனால் உங்கள் அன்பும் ஆசீர்வாதமும்
எப்பொழுதும் எங்களுடன் தான் இருக்கின்றது
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல் நாம்
அழுதாலும் உன் ஆன்மா ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கிறோம் !
உங்கள் பிரிவால் வாடும்
கணவர், பிள்ளைகள், சகோதரர்கள்