Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 SEP 1954
இறப்பு 20 MAR 2024
திருமதி ஞானேஸ்வரி தனபாலசிங்கம் (சாந்தா)
வயது 69
திருமதி ஞானேஸ்வரி தனபாலசிங்கம் 1954 - 2024 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சரவணையை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி தனபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.


எங்கள் முன்னறி தெய்வமாய்! எங்கள் மனங்களில் நிறைந்து நம்மை ஆட்கொண்டு நின்ற தாயெனும் அன்புரு 20.03.2024 அன்று அதிகாலை எமையெல்லாம் தவிக்க விட்டு மறைவுற்ற செய்தி கேட்டு! நேரிலும் மற்றும் தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல், இலங்காசிறி இணையத்தளம் வாயிலாகவும் துயரத்தில் பங்கு கொண்டு அனுதாபம் தெரிவித்தோர்க்கும்!

இறுதிக் கிரியை நடைபெற உதவிய குருக்கள், தேவாரப் பண்பாடி இறைவணக்கத்தில் ஈடுபட்டோர், சுய விருப்போடு அஞ்சலி உரை ஆற்றியோர், மலர் தூவியும் மலர் வளையங்கள் வைத்தும் அஞ்சலி செலுத்தியோர், மற்றும் வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்டு துயர் பகிர்ந்தோர்க்கும்!

இம் மலரினை மிக அழகுற பல சிரமங்களுக்கு மத்தியிலும் உரிய நேரத்தில் வடிவமைத்துத் தந்த..... அச்சகத்தினருகும், மலர் ஆக்கத்திற்கு உதவியோர்க்கும், அந்தியேட்டிக் கிரியைகள் சிறப்புற நடைபெற உதவிய குருக்கள் அவர்களுக்கும், ஆத்மசாந்திப் பிரார்த்தனை, மதியபோசன விருந்து ஆகியவற்றில் பங்கு கொண்ட உறவினர் நண்பர்கள் முதல் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"

அமரா் ஞானேஸ்வரி (சாந்தா) தனபாலசிங்கம் அன்னாரின் 31ஆம் நாள் நிகழ்வுகள் 19/04/2024 வெள்ளிக் கிழமை அன்று மு.ப 09.30 மணிமுதல் ந.ப 12.00 மணிவரை அவர்களின் இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம்.\

முகவரி:
46 rue de la goutte d'or 75018 Paris
(Metro : Barbes)

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்