யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானேஸ்வரி இராமநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே
உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 29-11-2025 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.