யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரம் தங்கராஜா அவர்கள் 23-12-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானேந்திரம், மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகர்(அவுஸ்திரேலியா), பிரதீஸ்க்கர்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனிதா, மதுரிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ரட்ணராஜா மற்றும் குமாரராஜா, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, ஆனந்தராஜா, ஸ்ரீகிருஷ்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனோஜ், தனுஷ், சுஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-12-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-12-2019 பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.