எதுவுமே நிரந்தரமில்லை என்பதைபோல் ஆறுதல் இல்லை சிலநேரம் அதைக்கூட சிந்தனைகள் கேட்பதில்லை கனத்த இதயத்தடனும் கண்ணீர் தழும்பும் கண்களோடும் காயத்தின் வலியுடனும் கடைசியாய் நீ அழைத்த குரலுடனும் கலங்கித்தான் எழுதுகின்றேன் கடைசி யாத்திரையாம் உங்கள் கனவெல்லாம் கரைந்த யாத்திரையாம் -இன்று அழகான புத்திரியாய் அன்பான துணைவியாய் அறிவான அம்மாவாய் பாசமுள்ள சகோதரியாய் இனிமையான தோழியாய் கடந்துவிட்ட உங்கள் காலம் முடிவிற்கு வந்ததென்ன முருகனின் தீர்ப்பென்ன? அன்பான குழந்தைகள் தேங்கி அழும் குரல்…… அலை அலையாய் கேட்கிறதா? ஆறுதலை கொடுத்துவிடு - அக்கா கலங்காமல் கடந்து செல்ல நாம் சிரித்த காலங்களும் நாம் அழுத காலங்களும் உடன் பிறவா சகோதரியாய் நீங்கள் காட்டிய பாசமும் நெஞ்சை விட்டு நீங்காது நிழல்போல கூட வரும் நித்தம் நித்தம் என்னுடனே அழைத்த குரல் இன்று மௌனமாகிப் போனதென்ன எதுவுமே நிரந்தரமில்லை என்பதைபோல் ஆறுதல் இல்லை சிலநேரம் அதைக்கூட சிந்தனைகள் கேட்பதில்லை. ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்.🙏🏽🙏🏽🙏🏽 🌺🌸🌼🌹🌷🌻🌼🌸🌺
So sorry to hear your loss. Please accept my deepest condolences. Our thoughts and prayers are with you to overcome this difficult time. May her soul attains Shanthi.