1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஞானமுத்து ஜெயக்குமார்
(குமார்)
வயது 39

அமரர் ஞானமுத்து ஜெயக்குமார்
1979 -
2019
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானமுத்து ஜெயக்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நட்பிழந்து நாம் துடித்த
ஓராண்டு நினைவலைகள்
மீன் பாடும் தேன் நாட்டில்
சூல் கொண்ட எம்மவனே
தேம்ஸ் நதி தேசத்தில்
மூச்சிழந்து போனாயே
காலம் அறுவடை செய்த
எம் தோழமையின் பெருவிருட்சம்
ஆணி வேர் அறுந்து
ஆண்டொன்று ஆனதின்று
நினைவழியா நாட்களாய்
நிதம் உன் நினைவுகள்
உயிர் வலிக்க விடை தந்தோம்
துயில் கொள் தோழனே!
எம் மூச்சிருக்கும் வரை நீ இருப்பாய்
என்றும் எம் தோழனாய்!
தகவல்:
சசிகுமார்