7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை செல்வரட்ணம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டுகள் ஏழு ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Iron Lady of Manipay, neighbour and beloved Gnanacca (aunty), your memories never fade.