Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUN 1940
இறப்பு 23 FEB 2019
அமரர் ஞானாம்பிகை கனகசபை 1940 - 2019 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னை சேசாவில் பிள்ளையார் கோவிலடி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை கனகசபை அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன்(Accountant, Magna International Inc) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நேசமலர், புஸ்பராணி(பிரான்ஸ்), கதிர்காமநாதன்(கனடா), புனிதவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,

ராம்கிஷன், சௌமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, மதியாபரணம், கோணேஸ்வரி, நவரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சோதிலிங்கம்(ஜெர்மனி), பாஸ்கரன்(இலங்கை), காலஞ்சென்ற சுசிலா ஆகியோரின் சிறிய தாயாரும்,

சத்தியவண்ணன், காலஞ்சென்ற சிறிவண்ணன், சுகுணா, வதனா, ரஞ்சித்குமார் ஆகியோரின் பெரிய தாயரும்,

வனஜா கனகரட்னம் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,

அர்ச்சுனா, ஆரணி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices