யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி Kamen ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Stouffville வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை பரமநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-11-2025
அம்மா!ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்
தாயாய் உதித்த எங்கள் பாசவிளக்கு ...
அள்ளி எடுத்து அரவணைத்த அன்புத் தாய்
பார்விட்டு அகன்று ஓராண்டு ஓடியது
கார்மேக கூட்டமாய் கலையாது உங்கள் நினைவுகள்
காலம் கடந்தும் வாழும் உங்கள் ஞாபகங்களுடன்
அன்பு குடும்பத்தினர்...