
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஹொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிரிதரன் கந்தையா(கிரி) அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று ஹொலண்டில் காலமானார்.
அன்னார், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்களின் பாசமிகு மூத்த சகோதரர் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் மறைவிற்கு RIPBOOK, ஐபிசி தமிழ் குழும இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.
அன்னாரின் நினைவாக:
அன்பின் திருவுருவே
பண்பின் உறைவிடமே
எமதருமை அண்ணாவே!
என்றும் சிரித்த முகத்துடன்
ஈர்க்கும் இசையாய் நீடு புகழ் கொண்டவரே
எம் மனங்களில் என்றும் வாழ்பவரே
எமதருமை அண்ணாவே!
நீண்ட காலம் எம்மோடு இருப்பீர்கள்
என எண்ணி பல எண்ணங்கள் கொண்டிருந்தோம்...
இப்படி விரைந்து செல்வீர்கள்
என்று நினைக்கவில்லை...
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எந்தன் உடன்பிறப்பே
உன்னை பாதி வயதில் பறிகொடுக்கும்
துயர் வந்து சேர்ந்ததேனோ?
எல்லா வலிகளையும்
வார்த்தைகளில்
சொல்லிவிட முடியாது
ஓசையின்றி அழுகின்ற நீண்ட
வலிகளுடன்
கலங்கி நிற்கிறோம் உமை நினைத்து...
உம்மை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
மீண்டுமோர் பிறப்பிருந்தால்...
எங்களிடமே வந்துவிடு...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
என்றும் உன் நினைவுகளுடன் நாம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எமது IBC Tamil நிறுவனத் தலைவரின் அண்ணா ( கந்தையா கிரிதரன் ) அவர்கள் 03.07.2025 அன்று இயற்கை எய்திய செய்தி எம்மை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும்...