யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை(பொன்னுத்துரை), ஞானம்மா(அழகு- Montreal) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற அலக்ஸ், பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பற்றிமா(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபானி, சபீனா, ஸ்ரெபான், அன்றியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தி(கனடா), ஜெயா(சுவீடன்), சுகந்தன்(லண்டன்), கசில்டா(கனடா), குட்டி(இந்தியா), குச்சா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிராஜா(மயூரன்- கனடா) அவர்களின் அன்பு மாமாவும்,
மைக்கல்(குட்டி- கனடா), மகேஸ்வரன்(ஈசன் - சுவீடன்), Atala Neil, மனோகரன்(மனோ- கனடா), காலஞ்சென்ற ராஜேஸ், காண்டீபன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமாயா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடல் 16-10-2020, 17-10-2020 ஆகிய தினங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்படும். (நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் தகனநிகழ்வில் மாத்திரம் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.)