Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 06 SEP 1946
மறைவு 01 DEC 2021
அமரர் ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோக அலுவலகர்
வயது 75
அமரர் ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை 1946 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புள்ள அப்பா !
நாழிகைகள் நகர்ந்து
நாட்கள் கடந்து செல்கின்றன..
விழிகளில் நீரும் வற்றிப் போகின்றது
விடிந்தவுடன் எம் நினைவெல்லாம்……
நடந்த உம் பிரிவு - ஒரு
கனவாகாதோ என்று

 நித்தமும் உம் நினைவுகள்
 நீங்க மறுக்கிறது - எம் மனதில்..
உம்மிடம் நாம் வியந்ததெல்லாம்
 வடிக்கமுடியாது வார்த்தைகளில்...
நீர் சோர்ந்து நாம் அறியோம்
நீர் இல்லை என்று உச்சரித்து
யாரும் அறியார்...
நம்பிக்கையே உமது பலம்
நம்பியோருக்கு நீரே பலம்
அன்பை வாழ்வாக்கி
தியாகத்தை அதற்கு உரமாக்கி
ஆயுள்வரை எமக்கு உழைத்த தந்தையே!
இளைப்பாற நினைத்து மரணத்தை
நீர் அழைத்தீரோ..

உம் இழப்பை ஈடு செய்ய
ஏதும் இல்லை - இவ்வுலகில்..
உம் அன்பின் நினைவுகள்- நீங்கிடாது
எம் உயிர் உள்ளவரை…
உம் பிள்ளைகளாய்
நாம் சிறக்க
வரம் தந்த தந்தையே!
உம்மிடம் நாம் கேட்பதெல்லாம்
உம் வழியில் நாம் வாழ
வழி காட்ட வேண்டுமென்று....

 We will miss you more than the words can say..
Rest in Peace Appa
 பிள்ளைகள் 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 57 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.