அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 MAR 1928
இறப்பு 16 APR 2022
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம் (கெங்கா ரீச்சர்)
வயது 94
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம் 1928 - 2022 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கெங்காரத்தினம் வல்லிபுரம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

16-04-2022 அன்று இறைபதமடைந்த எமது அம்மாவின் மறைவுச்செய்தி அறிந்து எம்முடன் பல வழிகளிலும் துயர் பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது அம்மாவின் அந்தியேட்டிக்கிரியை எதிர்வரும் 16-05-2022 திங்கட்கிழமை அன்று அதிகாலை அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரண கிரியைகளும் அம்மாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 21-05-2022 சனிக்கிழமை அன்று கீழ்காணும் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அத்தருணம் குடும்பசமேதராய் வருகை தந்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலுல் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

நடைபெறும் முகவரி:

Tooting and Mitcham community sports club,
Imperial sports ground,
Bishopsford road,
Morden SM4 6BF,
United Kingdom.

காலம் - 21.05.2022
நேரம் - 12:00 - 5:00 PM

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.