10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காயத்திரி பாலமுரளீதரன்
யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியை
வயது 42

அமரர் காயத்திரி பாலமுரளீதரன்
1970 -
2012
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல.19, 6ம் ஒழுங்கை கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காயத்திரி பாலமுரளிதரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-09-2022
நீங்காத நினைவு தந்து நீண்ட தூரம்
சென்று விட்டாய்!
ஆண்டுகள் பத்து கடந்தாலும் ஓயவில்லை
உங்கள் நினைவுகள், மாறவில்லை
உங்கள் முகம்- அம்மா!
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய்
‘அம்மா’ எனும் அற்புத பொக்கிஷத்தை
தொலைத்துவிட்டு- உம்
அன்பு நிகழ்வுகளுடனே வாழ்கின்றோம்- அம்மா
அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள்
ஒளி முகத்தை முன்நிறுத்தி என்றும்
மீளா நினைவுகளுடனே வாழ்கின்றோம்..
அம்மா! அம்மா! அம்மா!
நாகபூசணியின் பாதம் நோக்கி ..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.....
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்வதுடன் அவரது பிரிவால் ஆழ்துயருற்று இருக்கும் குடும்பத்தவர்களது மனங்கள் ஆறுதல் பெற வேண்டுகிறோம் . பாலகங்காதரன் குடும்பம் .