
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசலிங்கம் மனோரஞ்சிதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:13/05/2023.
ஆண்டொன்று ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம்
குல விளக்கே! தெய்வமே!
பண்ணிய பாவமென்ன உங்களைப்
பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்
மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல எம்
இதய வான் பரப்பில் ஒளி வீசும் துருவ நட்சத்திரம்
நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்
காலங்கள் உருண்டோடினாலும் எம்
எண்ண அலைகள் என்றென்றும் எதிரொலிக்கும்
உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
வேண்டி நிற்கும் குடும்பத்தினர்
13-05-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் London Sivan Kovil 4A Clarendon Rise, London SE13 5ES, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும் முதலாம் ஆண்டு திதி நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...