
கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி பூதேவி அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், காந்திமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேஷமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
ரதி, தேவி, பேபி, குகன், ரூபி, யசோதா, பிரியா, காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கஜந்தி, தயாநிதி, அஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திஷ், அயூரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சந்திரன் அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பத்தினியார் மகிழன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
“நீளும் இரவில் உமா
நினைக்கும் போதெல்லாம்”
“விழியின் ஓரம் நினைவு துளிகள்
கண்ணீராய் கரைகிறது”
“நான் எனக்காக சிந்திய
கண்ணீரைவிட உங்களுக்காக
சிந்திய கண்ணீர் தான் அதிகம்”...!!!!!