1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1947
இறப்பு 17 JUN 2020
அமரர் கணேசமூர்த்தி ஆறுமுகம் (குகதாஸ்)
இலங்கை போக்குவரத்து சபை முன்னாள் ஊழியர்
வயது 73
அமரர் கணேசமூர்த்தி ஆறுமுகம் 1947 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 52 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசமூர்த்தி ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!

நீங்கள் எங்களைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறோம்!!

இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ

ஆண்டொன்று ஆனாலும்
அழியாத அன்புருவாக
என்றும் வாழ்வீர்கள்...

நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும்...

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...


ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்