Clicky

20ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 APR 1930
இறப்பு 22 JUN 2000
அமரர் கபிரியேல் ஜோர்ஜ்
வைத்திய கலாநிதி, D.A.M.RIMP.J.P
வயது 70
அமரர் கபிரியேல் ஜோர்ஜ் 1930 - 2000 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கபிரியேல் ஜோர்ஜ் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
     -யோவான் 11:25 

அன்புள்ள அப்பா!! 

அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!

இருபது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே
நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices