10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கபிரியேல் ஜோஜ்
முன்னாள் உத்தியோகத்தர், Royal Ceylon Airforce, Kattunayaka
வயது 78
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இல.60 டேவிட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கபிரியேல் ஜோஜ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா...!
உங்களைவிட்டு நாங்களும்
எங்களைவிட்டு நீங்களும்
பிரிந்துவிட்ட நேரமிது...
உங்களையே நினைக்கின்றோம்
உங்களுக்காகவே வாழ்கின்றோம்
கண்ணீரில் கரைகின்றோம்
கண்ணுறங்க மறக்கின்றோம்!
எங்களை ஏன் நீங்கள் மறந்தீர்கள்?
தூரத்து நிலவாகத் தொலைந்து ஏன் போனீர்கள்!
ஆண்டுகள் பத்து கடந்தாலும்
எமை ஆளாக்கிய தந்தையின் பிரிவு ஆறாது
என்றுமே எம் மனதில்!
அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்