யாழ்ப்பாணம் 37/6 நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne Servion ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் ராஜகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
”ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்,
உன் கடவுளின் கரத்தில் அரசு மகுடமாய் விளங்குவாய்”
எசா 62:3
அறுபத்திரண்டு ஆண்டுகள் அழகாய்
அன்பாய் அரவணைத்தாய் - ஆனாய்
ஆண்டவனின் உருவாய் - நாம்
அனுதினமும் மெழுகாய்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக செபித்த அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகள் பல..!
Live Link: click here
அமைதியாய் ஆழ்ந்த உறங்குகிறாய். உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தார் எல்லாருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.