

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் லீலாவதி அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகநாதன், காலஞ்சென்ற செல்வநாதன், ஜீவநாதன், ஜெனாதர்சினி(முன்னாள் ஆசிரியை தர்சனா மருதமடு- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பிறேமநாதன், யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பெனிற்றா(ஓய்வுநிலை ஆசிரியை), சறோஜாதேவி(கனடா), ஜொபித்தா(ஆசிரியை- கட்டையடம்பன்), ரவிசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, அருணன், சாய் சோபிகா, கஜீபன், திபாகரன், சோபிகரன், சஜிகரன், அபூர்வா, அபூர்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜஸ்மிதா, லிசாந், நிம்சிஹா, றிஜிந், அல்றிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு அவரது மகன் ஜெகநாதன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியபண்டிவிரிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.