Clicky

பிறப்பு 20 MAY 1947
இறப்பு 30 MAY 2020
அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை
யாழ்.புனித மரியன்னை பேராலயம், கண்டி அம்பிட்டியா தேவாலயம், திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம் ஆகிய கத்தோலிக்க பணித்தளங்களில் பணியாற்றியவர், Bergen புனித பவுல் தேவாலய ஆன்மீக குரு, புனித Olav பேராலயத்தின் உதவிக் குரு, Lillestrom புனித மக்னஸ்(St.Magnus) ஆலய பங்குத்தந்தை.
வயது 73
அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை 1947 - 2020 தாளையடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமா என்னும் ஒரு மந்திரச் சொல் மாமா என்பது ஒரு மந்திரச் சொல் “தாலாட்டின் சொந்தக்காரி எனக்கு தாய் மட்டுமல்ல என் தாய்மாமனும் தான்” மாமா, இன்னுமொரு அம்மா நீ! நான் பிறக்க முன்னம், எனக்காக இறைவன் பிறக்க வைத்த ஓர் அற்புதம் நீ! அம்மாவின் தாலாட்டு உறங்க வைத்தது மாமா உன் தாலாட்டு எப்போதும் என்னை கிறங்க வைத்தது. முலைப்பால் கொடுக்காத ஒரு தாயுமானவன் நீ. மூலஸ்தானத்துள் அடங்காத என் கடவுளர் உலகமும் நீ. நெஞ்சில் சுமக்கும் என் வாழ்நாள் பல்லக்கு நீ. கொஞ்சிக் குலவும் என் வானத்து மின்மினி நீ. மாமா என்பது ஒரு மந்திரச் சொல் “தாலாட்டின் சொந்தக்காரி எனக்கு தாய் மட்டுமல்ல என் தாய்மாமனும் தான்” எல்லோரும் தர மறுத்ததை எனக்காக மட்டும் ஒருவனால் தர இயலுமாகில், எல்லோரும் கடிந்த போது எனக்காக மட்டும் ஒருவன் கண்ணீர் விடுவானாகில், எல்லாமும் அச்சமூட்டும் போது எனக்காக மட்டும் ஒருவன் வாளேந்தி நிற்பானாகில், எல்லோரும் நிராகரிக்கும் போது எனக்காக மட்டும் ஒருவன் வாதம் செய்வானாகில், விம்மலும் விசும்பலுமாய் நிற்கும் போதெல்லாம் ஒருவன் கண்ணீர் துடைக்க விரல்நுனி நீட்டுவானாகில், தோல்விகளில் துவண்டு சரியும் போதெல்லாம் ஒருவன் தோள்களை ஏணியாய் தந்து நிற்பானாகில், தயங்கித் துணிவற்று குனியும் போதெல்லாம் ஒருவன் ஊக்கமருந்து கொடுத்து உற்சாகம் தருவானாகில், தவறே செய்துநான் ஓரமாய் ஒதுங்கும் போதும்கூட ஒருவன் மீள எழ ஒரு நெம்புகோல் ஆவானாகில், அவன் மாமா என்னும் என் வாழும் கடவுள் தான். மாமா என்பது ஒரு மந்திரச் சொல் “தாலாட்டின் சொந்தக்காரி எனக்கு தாய் மட்டுமல்ல என் தாய்மாமனும் தான்” என்றுமே மறவா றஜித்தா, சாம் பிள்ளைகள் மொணிக்கா அக்கா பிள்ளைகள்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 03 Jun, 2020
நன்றி நவிலல் Mon, 29 Jun, 2020