Clicky

கண்ணீர் அஞ்சலி
வெனிசுலா நிலநடுக்கத் துயரம்
இறப்பு - 25 JUN 2026
வெனிசுலா நிலநடுக்கத் துயரம் 2026 Venezuela Venezuela
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 25-06-2026 வியாழக்கிழமை அன்று அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளது.

இவை வெனிசுலா நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்படாத நிலநடுக்கங்களாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் சரிந்துள்ளன. சாலைகள் சேதமடைந்து நாட்டின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெனிசுலாவின் முக்கிய விமான நிலையமான மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது. நிலநடுக்க பேரழிவு காரணமாக அந்நாட்டு தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வெனிசுலாவில் இந்த பேரிடரால் உயரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 235-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் மாயமாகினர். பலி எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்துயரில் உயிரிழந்த உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது ஐ.பி.சி, தமிழ்வின், லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் துயரிலும் கண்ணீர் சிந்தி பங்கெடுத்துக்கொள்கிறோம். மேலும் காயமடைந்து பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நலம்பெற வேண்டுகின்றோம்.

தகவல்: RIPBOOK

Summary

Photos

No Photos

Notices