

"பரம தந்தை எனக்குத் தருவதெல்லாம்
என்னிடம் வந்து சேரும் என்னிடம்
வருபவனையோ நான் தள்ளி விடேன்"
யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்னாந்து அந்தோனிசாமி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அய்யா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அய்யா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
அன்னாரின் பிரிவால் துயருறும் பிள்ளைகளான பத்திமாலூசியா(ஜேர்மனி), ஸ்ரனிஸ்லோஸ்(நோர்வே), வொசிங்ரன்(இலங்கை), யஸ்ரின் கின்ரன்(ஜேர்மனி), அகஸ்ரா(ஜேர்மனி), பீற்றர்றோசன்(இலங்கை), இயூஜீன்மசனெட்(இலங்கை), எமன்சியன்(நோர்வே), டெல்வியன்(இலங்கை) மற்றும் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மைத்துனர், மைத்துனிமார்.
25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் கொழும்பு புனித வேளாங்கன்னி மாதா ஆலயத்தில் அன்னாரின் விண்ணகப் பிறப்பின் 25ம் ஆண்டு வருட நிறைவை நினைவு கூர்ந்து ஆன்ம இளைப்பாற்றிக்காக இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.