
யாழ். சில்லாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட பற்றிமா லூா்து விமோறியஸ் அவர்கள் 16-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவா்களான இன்னாசிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யாக்கோ அவர்களின் பாசமிகு மனைவியும்,
கொலஸ்ரிக்கா, பிரதீப், ஜெரால்ட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிலோமினா, காலஞ்சென்ற யேசுதாசன் மற்றும் இராஜேஸ்வரி(கனடா), அன்ரனி பிரான்சிஸ்(ஜோ்மனி), யேசுரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாஸ்கரன், பாரதி(இந்தியா), ஜொய்சி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற செபமாலை, றெஜினா பாலதாஸ், மரிய கொன்சி, கிறிஸ்ரினா, கிளி, பொன்ராசா, ஜசிந்தா, காலஞ்சென்ற பிரான்சிஸ், யோகம், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவுஸ்ரினா, டனுசிகா, திசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Enathu appammavukku aalntha ethaya ansali,