Clicky

பிறப்பு 14 DEC 1945
இறப்பு 11 JUL 2019
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்
வயது 73
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் 1945 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அருட் தந்தை அன்ரன் றொக் 14 JUL 2019 Sri Lanka

அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களது இழப்பு என்பது எவராலும் எப்போதுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவே கருதப்படக் கூடியது. ஒரு குருவாக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளுக்கும் அப்பால் ஒரு தாயுள்ளம் கொண்ட பாசத் தந்தையாகவே அவர் வாழ்ந்திருந்தார். தமிழினம் சந்தித்த இருபெரும் துயர நாட்களில் தனது தனித்துவம் மிக்க ஆன்மீக ஆளுமையுடன் களம் நின்று கடமையாற்றியவர். சுனாமிப் பேரலை அவலத்திலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திலும் தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக நின்று தன்னையோர் உன்னத ஆயனாக உறுதிப் படுத்தியவர். அன்பான பார்வயும் அரவணைக்கும் பண்புகளும்தான் அவரை ஏழைகளின் நண்பனாகவும் ஆதரவற்றவர்களின் அன்பனாகவும் அடையாளப் படுத்தியது. அவர் எண்ணற்ற ஏழைக் குழந்தைகளின் வாழ்விற்கு வழிகாட்டி ஒளியூட்டிய மகத்தான மாமனிதர். அமைதியிலும் அடக்கத்திலும் அறப்பணி ஆற்றினாலும் தளராத துணிவோடு நீதிக்காக ஒலித்த ஒப்பற்ற குரலாகவே இறுதிவரை வாழ்ந்தார். விசுவாசத் தந்தையாக இறைபணியையும், தேசத்தை நேசித்து மக்கள் பணியையும் தன் இரு கண்களாக கருதி அரும்பணி ஆற்றிய ஓர் ஒப்பற்ற ஆளுமையை இந்த தேசம் இன்று இழந்து நிற்கின்றது. “கொள்கைகளுக்காக வாழ்ந்தவர்கள் என்றுமே வாழ்பவர்கள்” என்பதற்கேற்ப அருட்தந்தை அவர்கள் இந்த மண்ணினதும் மறைமாவட்டத்தினதும் ஆன்ம குரலாக என்றும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருப்பார். இதுவரை அடுத்தவர் வாழ்வைக் கொண்டாடிய தந்தை இப்போது தனது வாழ்வை இறைவனோடு கொண்டாடிடச் சென்றிருக்கின்றார். “நன்று நன்று நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே” எனும் வரவேற்புடன் நிலையான அமைதியில் சாந்தியடைவீராக!

Tributes