



அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் மறைவு தமிழ் இனத்துக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் செட்டிகுளம் அந்தோனியார் தேவாலயத்தில் பணியாற்றினார். அந்தக்காலப்பகுதி ஜெ. ஆர். ஜேவத்ர்த்தனா பதவிக்கு வந்த காலப்பகுதியில் சிங்கள இனவெறியை கட்டவிள்த்துவிட்டு கொழும்பு விலும் மலையகத்திலும் தமிழர்களை படுகொலை செய்தும் உடமைகளை சூறையாடியும் தென்பகுதியை விட்டு தமிழர்களை விரட்டியடித்த போது மறைந்த ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் பல நூற்றுக்கணக்கான தமிழர்களை பார ஊர்தி மூலம் செட்டிகுளம் அழைத்து வந்து செட்டிகுள மக்களிடம் அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யும்படி அவசர உதவி கோரினார் . செட்டிக்குள மக்கள் அந்த அகதிகளை பொறுப்பெடுத்து உதவியளித்தார்கள் எனது தந்தையும் ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் கோரிக்கையை ஏற்று இரண்டு குடுமத்தை பொறுப்படுத்து இரண்டு வருடங்கள் எங்களுக்கு சொந்தமான காணியில் குடியாமத்தினார் . முசல்க்குத்தி என்னும் பெயரில் மிகப்பெரிய காடு செட்டிகுளம் பகுதியில் இருந்த்தது அந்தக்காட்டில் சிலநூறு ஏக்கரை அளித்து அந்த மக்களை அங்கு குடியமர்த்தி ஒரு கிராமத்தை உருவாக்கிய முழுப்பொறுப்பும் இந்த மாகாத்மாவையே சாரும் . எந்த உள்நோக்கமும் இல்லாமல் மதங்கள் கடந்து தன் இனம் வாழ மக்கள் பணிசெய்த மகானை நினைவுகூர்ந்து மகாத்மா சாந்தியடயப் பிராத்தனை செய்வோம் .
