Clicky

பிறப்பு 14 DEC 1945
இறப்பு 11 JUL 2019
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்
வயது 73
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் 1945 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Fr. S. Anpurasa, OMI 12 JUL 2019 Sri Lanka

அன்பிற்கினிய அருள்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் இறுதி அஞ்சலிகளும்! இவ்வளவு விரைவாக அடிகளாருக்கு இறுதியஞ்சலி செலுத்துவேன் என எண்ணவில்லை! இறப்பதற்கு முன் இறுதித்தடவையாக இரண்டு முறைகள் அவரைச் சந்தித்தேன், பேசினேன், உரையாடினேன், ஆசிகூறினேன் என்ற ஆறுதல் மட்டும் இருக்கிறது. அடிகளாரைப்பற்றி சில வரிகளாவது எழுதவேண்டும் என மனம் துடிப்பதனால் ஒருசில வரிகளையாவது எழுத விளைகிறேன். என்னைக் கவர்ந்த சில ஆளுமைகளுள் அருள்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் ஒருவர். காணும் போதெல்லாம் அவரின் உற்சாகம் தருகின்ற வார்த்தைகள், ஊக்கம் ஊட்டும் பார்வைகள் எல்லாம் என் இதயத்தை இப்போது வருடிச் செல்கின்றன! அடிகளார், மிகுந்த மனிதநேயமும் மனிதாபிமானமும் மிக்கவர். ஏழைகளின் வாழ்வை உயர்த்தும் இனிய இதயம் கொண்டவர். நீதியின் குரலாக நிமிர்ந்துநின்று ஒலிப்பவர். சின்னச்சின்ன விடயங்களை எத்தகைய நிறைந்த அன்புடனும் அக்கறையுடனும் ஆற்றவேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன், அவரில் கண்டுகொண்டேன். தன் அன்பாலும் அணுகுமுறையாலும் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர். நான் செய்த, செய்துவரும் எழுத்துப் பணிகளை தேரில் ஏற்றித் தெருவெல்லாம் இழுத்துச் சென்று கொண்டாடி மகிழும் சில வாசகர்களில் அருள்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் மிக முக்கியமானவர். அதற்குச் சான்று, அவரே தன் கைப்பட 2003 எனக்கு எழுதிய கடிதம்! என்னுடைய ஒவ்வொரு நூலும் வெளிவருகிறபோது தவறாமல் அதனை வாசித்துவிட்டு, ‘அடுத்த நூல் எப்போது வரும்?’, ‘தொடர்ந்து எழுதுங்கள், அதனைப் பணியாகச் செய்யுங்கள்!’ என அடிக்கடி அன்புக்கட்டளை இடுபவர். எல்லோரும் இறக்கத்தான் போகிறோம்! அவ்வகையில், அருள்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் இப்போது இறந்திருக்கிறார்! ஆனால், ஏதோ தெரியவில்லை சில மனிதர்களின் இறப்பு மனதை வெகுவாக வாட்டுகிறது. அந்த வரிசையில் அருள்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் இழப்பினால் ஏற்படும் வலி ஏதோ எனக்கு தவிர்க்க முடியாததாகிறது! போய் வாருங்கள் தந்தையே, உங்களின் மனித புனித குணங்களுக்காக – பணிகளுக்காக இறைவனுக்கு நன்றிகள் கூறி ஆண்டவரின் அரவணைப்பில் எந்நாளும் இன்புற்றிருக்க, இளைப்பாற விடைதருகிறோம்!

Tributes