Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1959
இறப்பு 09 JUL 2024
அமரர் யுசேப்பியஸ் ஸ்ரனிஸ்லோஸ் செல்வநாதன் (செல்வம்)
வயது 64
அமரர் யுசேப்பியஸ் ஸ்ரனிஸ்லோஸ் செல்வநாதன் 1959 - 2024 தாளையடி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யுசேப்பியஸ் ஸ்ரனிஸ்லோஸ் செல்வநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலவோட்டத்தில் கண்ணிமைக்கும்
பொழுதுக்குள் வருடம் ஒன்று கடந்தது

பருவகாலமாற்றத்தில் நாங்கள்
செய்த அத்தனையும் பொறுத்து
எமை ஆளாக்கிவிட்டவரே அப்பா
சொல்லாமல் எங்குதான் சென்றீர்.....

உங்கள் சொல்லும் சிரிப்பும் ஏன்
கடிந்து கொண்ட பொழுதுகளும்
எமக்கு என்றும் மறவாத நினைவுகள்
கடவுளாயிருந்து வழிநடத்தும் அப்பா..

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக 08-07-2025 செவ்வாய்க்கிழமை பி.ப 4.00மணியளவில் தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்திலும் மற்றும் 09-07-2025 புதன்கிழமை பி.ப 05.30 மணிக்குபேர்த் மேற்கு ஆவுஸ்ரேலியா புனித ஜெறோம் ஆலத்திலும் 09-07-2025 மு.ப 06.45 மணிக்கு Holy Family Convent Eulay Home Passayoor Jaffna இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

Photos