Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAY 1965
இறப்பு 03 MAY 2020
அமரர் எரிக் வோல்ரர் சிலுவைதாசன் (நரேந்திரா)
வயது 54
அமரர் எரிக் வோல்ரர் சிலுவைதாசன் 1965 - 2020 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

“உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும்
என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்”
யோவான்11:26 

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட எரிக் வோல்ரர் சிலுவைதாசன் அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிலுவைதாசன் கிறிஸ்ரினா தம்பதிகளின் அருமை மகனும், செபஸ்ரியாம்பிள்ளை ஜோசேப்பினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செரின் சாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஏற்றியன் றோஜர், ஏற்றியானா ஜோசப்பின், ஏரோன் கொட்பிரி ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற எட்னாமரியா(திலகராணி) மற்றும் எட்வின் ரவீந்திரா(ரவி), ஜெரி நித்தியேந்திரா(குட்டியன்), பற்றிமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜோசப் D ஜெயம், சூரியா, கிறிஸ்ரெபெல்லா(குட்டி), அமலானந்த சந்தியோ(ரஞ்சன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யசிந்தா, லலிதா, பத்திமா, ரஞ்சி மற்றும் சகாயராணி, யேசுநாயகி, ராதா, அன்ரனிதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமயந்தி முத்துக்குமரன், துஷியந்தினி மேர்வின் கோமஸ், ஜெயபிரதீபன், றெனிக்கா ஜோசப்பின், அரோன்சன், நிரோன்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரியூலின் ஆதர், திபேரி அனா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

வினோஜின் பிறேம்குமார், ஆஸ்லி அருண், ஜெனிசன், ஜோஸ்வா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஐரின் அமேலியா, ஐவன் ஜோசப், இசபெல் கிறிஸ்ரினா, இவானா அன்ரோனற், ஏதென் ஆதித், நோவா ஜீவன், எவான் ஆதவ், ஆடம் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices