Clicky

40ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 FEB 1932
இறப்பு 21 OCT 1981
அமரர் இம்மானுவேல் ஜார்ஜ் பிரான்சிஸ் பிள்ளை
வயது 49
அமரர் இம்மானுவேல் ஜார்ஜ் பிரான்சிஸ் பிள்ளை 1932 - 1981 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இம்மானுவேல் ஜார்ஜ் பிரான்சிஸ் பிள்ளை அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.

டடா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!

 நாற்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்

கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே

நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
அன்னை வேளாங்கண்ணியை பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices