Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 12 AUG 1946
விண்ணில் 12 MAY 2019
அமரர் எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா (பெரியதம்பி)
வயது 72
அமரர் எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா 1946 - 2019 பருத்தித்துறை முனை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஓடிச் சென்றாலும் என்றும் எம்மை விட்டு
நீங்காது உம் நினைவுகள்
ஏங்குகின்றோம் உம்மோடு நாம் வாழ்ந்த
காலங்களை எண்ணியே
கடின உழைப்பாளியாய் கஷ்டங்கள் பல கண்டு
எம்மை வளர்த்த அப்பாவே
பாதி வழியில் எங்களை மறந்து சென்றீரோ உம்
பாசத்திற்க்காய் ஏங்கி நிற்க்கின்றோம் நாங்கள்
எங்களின் உயிர் மூச்சாய் எங்களோடு கூடவே வாழ்ந்து
வந்த அப்பாவே தேடுகின்றோம் தினம் உம்மை

கனவுகள் பல கண்டோம் உம்மை எவ்வாறெல்லாம்
வாழ வைக்க வேண்டுமென்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் காலம் வரும்
முன்பே எம்மை விட்டுச் சென்றதேனோ
நீரே தன் உலகமென வாழ்ந்திருந்த அம்மாவின்
நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தோட
கலங்கி நிற்க்கின்றோம் சொல்வதறியாமல்
உங்கள் பிள்ளைகள் நாம் இங்கு
அம்மாவைத் தேற்ற ஐவர் நாமுள்ளோம் அவளருகில்
ஆனால் எங்களைத் தேற்ற யாருள்ளார் எம்மருகில்
எத்தனை உறவுகள் எம்மைத் தேடி வந்தாலும்
அப்பாவே உமக்கீடாகாது எதுவுமே
உங்கள் ஆசைப் பேரப்பிள்ளைகள் உம்மைத்தேடி கலங்கி நிற்க
அவர்களைத் தேற்ற வழியின்றி தவிக்கின்றோம் நாம்
நீங்கள் நேசித்த உயிருக்குயிரான பேரப்பிள்ளைகளை
தவிக்கவிட்டுச் சென்றீரோ
மறு ஜென்மம் எண்டொன்று உண்டானால்
மறுபடியும் உமக்கு பிள்ளைகளாய் வந்து
பிறக்க வேண்டுகிறோம் இறைவனையே
....

தகவல்: குடும்பத்தினர்