யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், Moratuwa Soysapura ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவயோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-07-2024
ஆண்டு ஆயிரம் கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் பப்பா!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்த
எமது அன்புத் தந்தையே!
அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான அறிவுரையும், முத்து போன்ற
சிறந்த பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
வாருங்களே பப்பா!
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே!
வாசம் குன்றா வாழ்வு தந்து
எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப்போல் இந்த உலகில் யார்
இருக்க முடியும் பப்பா!
உங்களின் பாசத்திற்கு அளவேயில்லை பப்பா!
எம் கவலைகளைச் சொல்வதற்கு
வார்த்தைகளே இல்லை!
பப்பா பப்பா என்று கூப்பிட ஏங்கிநிற்குது
எங்கள் மனம்!
வாருங்கள் அப்பா! எங்களை பாருங்கள் அப்பா
எங்களது எல்லா செயலுக்கும் வழிகாட்டுங்கள் பப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவால் வாடும் குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.