Clicky

மரண அறிவித்தல்
திருமதி எலிசபெத்தம்மா தவமணி மரியதாஸ் வயது 82 பிறப்பு : 26 APR 1937 - இறப்பு : 16 DEC 2019
திருமதி எலிசபெத்தம்மா தவமணி மரியதாஸ் 1937 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணி மரியதாஸ் அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னைய்யா, சவினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற அந்தோனி பர்னாந்து, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

வதனா(ஓய்வுபெற்ற BOC உத்தியோகத்தர்), யமுனா, ரஞ்சன்(கனடா), ரகு(கனடா), ரதினா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கீதபொன்கலன், ஜேசுதாசன், லின்டா(கனடா), மெறின்(கனடா), பயஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற திருச்செல்வம், குலசிங்கம், பூமணி, சோதிமணி மற்றும் செல்வமணி, யோகமணி(பிரான்ஸ்), பவளமணி, பாக்கியராஜா, ருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமேஸ், பிரதிஸ், நிரோஷினி, டில்ஷானி, ஹெலானி, திவானி, லோஜி, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

டேமியன், கிரிஸ்டன், கிரின்ஸியா, துஷாத் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ரோகித், வீனா ஆகியோரின் பாசமிகு பூட்டம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-12-2019 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரத்னா மலர்சாலையில் வைத்து 19-12-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியைகளுடன் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்