Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 OCT 1933
இறப்பு 05 MAR 2019
அமரர் எலிசபெத் ஐயாத்துரை 1933 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், லண்டன், ஜேர்மனி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட எலிசபெத் ஐயாத்துரை அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று கிளிநொச்சியில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மிக்கேல் சபரிமுத்து, திரேசம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மிக்கேல் சந்தியாப்பிள்ளை, மரியம்மாள் தம்பதிகளின் பெறாமகளும்,

நந்தினி(ஜேர்மனி), லோகினி(ஜேர்மனி), ஷாமினி(ஜேர்மனி), பிறேமதாசன்(லண்டன்), Dr. பிறேம்றோய்(பாபு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பிரான்ஸிஸ், பாக்கியநாதன், பிலோமினா மற்றும் அன்ரன் ஜோசப், மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசுப்பிரமணியம், தேவராஜா, சிவஞானசுந்தரம், தேவதயாளினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராணி, சறோ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யூட், சிந்து, பிறேம்குமார், Dr. பிரியதர்சினி, கார்த்திக், சாருஜன், சுஜீபன், எலோன், லியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சித்தார்த், யுவேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-03-2019 செவ்வாய்க்கிழமை முதல் 08-09-2019 வெள்ளிக்கிழமை வரை இல.72, சேவியர் சந்தி, கனகபுரம், கிளிநொச்சி எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 08-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அந்தோனியார் தேவாலயம் ஜெயந்திநகர், கிளிநொச்சியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து உருத்திரபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்