

யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Battersea வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சீவரெத்தினராசா இளையதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:09/03/2023.
கணப் பொழுதும் நினைக்கவில்லை
எம் கலங்கரை விளக்கே
இமைப்பொழுதில் எமை விட்டகல்வாயென
ஆனாலும் எங்களின் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருகிறீர்கள்
கண்ணான நம் பிள்ளைகளை
கருத்தோடு காத்து இருப்பேன்
கண்மூடும் காலம் வரை
மனதில் உங்களை எண்ணியே
எம்முயிரான எங்களப்பாவே!
எம்மைவிட்டு ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டு ஆனாலும்
எம் நினைவில் கலந்து எங்களை
வழிநடத்திச் செல்லும்
துணையாய் இருப்பாய் நீங்களப்பா!
பண்புள்ள தம்பியாய் பாசமிகு அண்ணனாய்
எங்களுடன் உறவாடி நின்றவனே
உந்தன் நினைவுகளை சுமந்து
ஆண்டொன்றைக் கழித்து விட்டோம் நாங்களே
அன்பு மச்சானாய் ஆசை
அத்தானாய் எம் உறவில் கலந்து
நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பாய்
எம் காலம் உள்ளவரை
நெஞ்சில் நிறைந்திருப்பாய்
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்து நிற்கும் உந்தன் நினைவோடு
நித்தமும் வாழ்கின்றோம்
நடைப்பிணமாய் நாம் இங்கு
எம்மை ஆற்றுப்படுத்த அருகில் இல்லாவிட்டாலும்
எங்களை தேற்றும் இறைவனோடு சேர்ந்து
தெய்வமாய் துணையிருக்க
தினம் தினம் வேண்டுகின்றோம்
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்த வண்ணம் வாழும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்,
சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள்.