Clicky

பிறப்பு 14 JAN 1933
இறப்பு 27 MAY 2026
திரு இளையதம்பி பொன்னம்பலம்
வயது 93
திரு இளையதம்பி பொன்னம்பலம் 1933 - 2026 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kannan Kathirgamadasan 29 MAY 2026 Canada

தாய்க்குப் பின் தாய்மாமன் என்றே எம்மைத் தாங்கிப் பிடித்த பெரும் அரணே….. சாய்வதற்குத் தோள் கொடுத்தாய் அன்று- இன்று நீ சரிந்தாயோ எம்மைத் தவிக்க விட்டு… குடும்பத்தின் ஆணிவேராய் நின்று எங்கள் குறைகள் நிறைகள் யாவையும் கண்டு மடி சுமந்த தாயைப் போலே- எமக்கு மறுவாழ்வு தந்தாயே அன்பினாலே…. வார்த்தைகளில் அடங்காது நீ செய்த நன்மை வானளவு உயர்ந்ததையா உந்தன் பெருமை கைநீட்டி நாம் கேட்கும் முன்னே- வாரி வழங்கிய வள்ளல் ஐயா நீ… மாமா என்றொரு மாணிக்கம் எங்கள் கைகளில் இருந்து நழுவி இறைவனின் பாதமதில் இளைப்பாறி விட்டது என்றும் உங்கள ஆத்ம சாந்தி வாங்கி அந்த அரனிடம் மன்றாடிக் கொள்கிறோம்…. பூமி உள்ளவரை உந்தன் நினைவுதான் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் என்பது தான் நிஜம் இறைவனின் பாதத்தில் நீ இளைப்பாற எங்கள் கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கை ஆக்குகிறோம்… *ஓம் சாந்தி! ஓம் சாந்தி ஓம் சாந்தி!!*

Tributes