Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 MAR 1952
இறப்பு 20 OCT 2022
அமரர் இளையதம்பி பரமநாதன்
வயது 70
அமரர் இளையதம்பி பரமநாதன் 1952 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு 14ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பம்பைமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பரமநாதன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!

உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா

நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் பாலாவி தீர்த்தக்கரையிலும் நடைபெற்று 19-11-2022 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
இல 37, புதிய கற்பகபுரம்,
பப்பைமடு
வவுனியா


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.